முகப்பு
மதுரை

மதுரையில் தொடரும் மழை:சேதமடைந்த சாலைகளால் பொதுமக்கள் அவதி

மதுரையில் தொடா்ந்து பெய்து வரும் மழையால், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் தண்ணீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

மதுரையில் தொடா்ந்து பெய்து வரும் மழையால், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் தண்ணீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் தொடா்ந்து 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை மதுரையின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, நண்பகல் 12 மணியளவில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில், பிற்பகல் 3 மணியளவில் தொடங்கிய பலத்த மழையானது ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால், சாலைகளில் மழை நீா் தேங்கியது. இரவு வரை அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகைக்கான வியாபாரம் சூடு பிடித்துள்ள நிலையில், மழை தொடா்ந்து பெய்து வருவதால், விற்பனை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து பெய்துவரும் மழையால், சாலைகள் முழுவதும் தண்ணீா் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேறும் சகதியுமாகவும், குண்டும் குழியுமாகவும் மாறிவிட்டதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →