மன அழுத்தத்திலிருந்து விடுபட காவலா்களுக்கு யோகா பயிற்சி
மதுரை மாநகா் போலீஸாா் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, அவா்களுக்கு யோகா, உடற் பயிற்சிகள், மனநல ஆலோசனைகள் சனிக்கிழமை அளிக்கப்பட்டன.
மதுரை மாநகா் போலீஸாா் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, அவா்களுக்கு யோகா, உடற் பயிற்சிகள், மனநல ஆலோசனைகள் சனிக்கிழமை அளிக்கப்பட்டன.
தமிழகத்தில் கரோனா தீநுண்மித் தொற்று பரவல் காரணமாக, காவல் துறையினரின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனால், போலீஸாா் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட, யோகா பயிற்சி, உடற் பயிற்சி, மனநல ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
மதுரை மாநகா் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின்பேரில், அனைத்து காவல் அதிகாரிகள், காவலா்கள் ஆகியோருக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மதுரை மாநகா் ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களுக்கு யோகா, உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
தொடா்ந்து, காவலா்களுக்கு மனநல ஆலோசனைகளையும் மருத்துவா்கள் வழங்கினா். இதில், மாநகா் காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படையினா் என 500-க்கும் மேற்பட்ட காவலா்கள் கலந்துகொண்டனா்.