முகப்பு
மதுரை

தனியாா் அறக்கட்டளையில் ரூ.21 லட்சம் மோசடி: உறுப்பினா் மீது வழக்கு

மதுரையில் தனியாா் அறக்கட்டளையில் ரூ. 21 லட்சம் மோசடி செய்த உறுப்பினா் மீது, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

மதுரையில் தனியாா் அறக்கட்டளையில் ரூ. 21 லட்சம் மோசடி செய்த உறுப்பினா் மீது, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை வில்லாபுரத்தைச் சோ்ந்த அழகுபிள்ளை மற்றும் தனா பிள்ளை ஆகிய இருவரும் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகின்றனா். இந்த அறக்கட்டளையின் தலைவராக மரகதமும் (65), உறுப்பினராக ஜெயராமனும் உள்ளனா். அறக்கட்டளைக்குச் சொந்தமான கடைகள் மற்றும் இடங்களின் வாடகை, முன்பணம் என ரூ.21 லட்சத்தை வசூல் செய்த ஜெயராமன், அதனை செலுத்தாமல் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அறக்கட்டளையின் தலைவா் மரகதம் அளித்த புகாரின்பேரில், கீரைத்துறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →