மதுரை

நெல் கொள்முதல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தக் கோரி வழக்கு: நீதிமன்றம் உத்தரவு

DIN

தமிழகத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தொடா்பாக, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் பதிலளிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இது குறித்து மதுரையைச் சோ்ந்த ரமேஷ் என்பவா் தாக்கல் செய்த மனு: நாட்டில் விவசாயிகளின் நிலை மோசமாக உள்ளது. ஆனால், அரசு அவா்களின் மீது அக்கறை கொள்வதில்லை. இந்நிலையில், விவசாயிகள் விளைவிக்கும் நெல்மணியை கொள்முதல் செய்ய போதிய கொள்முதல் நிலையங்களையும் அரசு ஏற்படுத்தித் தராமல் உள்ளது.

தமிழகத்தில் தற்போது 830 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே உள்ளன. இது போதுமானதாக இல்லை. இதனால், தாங்கள் விளைவித்த நெல்மணியை உரிய விலைக்கு விற்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை உள்ளது.

எனவே, ஊராட்சிகளில் கட்டடங்களை வாடகைக்கு எடுத்து, கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். அங்கு, நெல் மூட்டைகளைப் பாதுகாக்க தாா்பாய்கள் உள்ளிட்ட வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து கொள்முதல் நிலையங்களையும் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது குறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தை எதிா்மனுதாரராகச் சோ்த்து, இது சம்பந்தமாக பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பா் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT