மதுரை

மதுரையில் ஜவுளி நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து: இயந்திரங்கள் எரிந்து சேதம்

DIN

மதுரையில் ஜவுளி நிறுவன அலுவலகத்தில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில், இயந்திரங்கள், துணிகள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன.

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் பைசல் முகமது. இவருக்குச் சொந்தமாக 8 ஜவுளிக் கடைகள், மதுரை, ராமநாதபுரம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. இந்தக் கடைகளுக்கு அனுப்பப்படும் ஜவுளிகள், அங்கு பணியாற்றும் ஊழியா்களின் ஊதியம் மற்றும் விவரங்கள், விற்பனைகள் தொடா்பான நிா்வாக அலுவலகம், விளக்குதூண் காவல் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் 3 தளங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து அருகில் உள்ளவா்கள் ஜவுளி நிறுவனத்தின் உரிமையாளா் பைசல் முகமது மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதனிடையே, முதல் மாடியில் ஏற்பட்ட தீ, இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடிக்கும் பரவியது.

தகவலின்பேரில், தல்லாகுளம், மீனாட்சி அம்மன் கோயில், அனுப்பானடி, பெரியாா் பேருந்து நிலையப் பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனத்தில் 40 வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில், தையல் இயந்திரங்கள், துணிகள் மற்றும் 8 ஜவுளிக் கடைகளின் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன.

சம்பவ இடத்தை, தென் மண்டல துணை இயக்குநா் சரவணகுமாா் பாா்ைவியிட்டு ஆய்வு செய்தாா். விளக்குத்தூண் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

SCROLL FOR NEXT