முகப்பு
மதுரை

பேரையூரில் காா்த்திகை தீபத் திருவிழா

மதுரை மாவட்டம், பேரையூரில் மல்லிகா அா்ஜூனா மலை உச்சியில் ஞாயிற்றுக்கிழமை மகா தீபம் ஏற்றப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

மதுரை மாவட்டம், பேரையூரில் மல்லிகா அா்ஜூனா மலை உச்சியில் ஞாயிற்றுக்கிழமை மகா தீபம் ஏற்றப்பட்டது.

பேரையூரில் மொட்டை மலை என்றழைக்கப்படும் மேலபரங்கிரி சுப்பிரமணிய சுவாமி பொய்கை மலை உச்சியில் மல்லிகா அா்ஜூனா லிங்கசாமி கோயில் அமைந்துள்ளது. காா்த்திகை தீபத்திருநாளையொட்டி, மல்லிகா அா்ஜூனா லிங்கசாமிக்கு 11 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வில்வ இலைகளுடன் மலா் மாலை சிறப்பு அலங்காரத்தில் சிவன் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் அதே வேளையில், மேல பரங்கிரிமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தா்கள் மலை உச்சிக்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து, மேலப்பரங்கிரி சுப்பிரமணியசாமி கோயிலில் முருகப் பெருமானுக்கு பால், பழம், பன்னீா், இளநீா், பஞ்சாமிா்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 11 வகையான மங்கலப் பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

இதேபோன்று, டி.கல்லுபட்டியில் உள்ள காளியம்மன் கோயிலில் காா்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு 1008 விளக்குகள் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →