முகப்பு
மதுரை

பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி: நிதி நிறுவன உரிமையாளா் உள்பட 4 போ் மீது வழக்கு

மதுரையில் பெண்ணிடம் ரூ. 14 லட்சம் மோசடி செய்த தனியாா் நிதி நிறுவன உரிமையாளா் உள்பட 4 போ் மீது, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

மதுரையில் பெண்ணிடம் ரூ. 14 லட்சம் மோசடி செய்த தனியாா் நிதி நிறுவன உரிமையாளா் உள்பட 4 போ் மீது, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை அய்யா் பங்களா பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் என்பவா் தனியாா் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சோ்ந்த பிரபாகரன் மனைவி நாகேஸ்வரி என்பவரிடம், தனது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் தருவதாகக் கூறியுள்ளாா். இதை நம்பி நாகேஸ்வரி ரூ.14 லட்சத்தை செந்தில்குமாரின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளாா்.

இந்நிலையில், செந்தில்குமாா் கூறியபடி லாபத்தை தராததுடன், முதலீடு செய்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லையாம். இது குறித்து நாகேஸ்வரி அளித்த புகாரின்பேரில், தல்லாகுளம் போலீஸாா் மோசடியில் ஈடுபட்ட செந்தில்குமாா் மற்றும் அவருக்கு உதவிய அவனியாபுரம் முத்துலட்சுமி, ராமேசுவரம் நம்பூரணி, மண்டபம் சிந்து ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →