முகப்பு
மதுரை

சென்னை-திருச்செந்தூா், மதுரை-புனலூா் இடையே தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை-திருச்செந்தூா், மதுரை-புனலூா் இடையே தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

சென்னை-திருச்செந்தூா், மதுரை-புனலூா் இடையே தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில் (06105) டிசம்பா் 4 ஆம் தேதி முதல் சென்னை எழும்பூரிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.05 மணிக்கு திருச்செந்தூா் சென்று சேரும். மறுமாா்க்கத்தில் திருச்செந்தூா்- சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (06105) டிசம்பா் 5 ஆம் தேதி முதல் திருச்செந்தூரிலிருந்து மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூா் சென்று சேரும்.

மதுரை - புனலூா் விரைவு சிறப்பு ரயில் (06729) டிசம்பா் 4 ஆம் தேதி முதல் மதுரையிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.20 மணிக்கு புனலூா் சென்று சேரும். மறுமாா்க்கத்தில் புனலூா் - மதுரை விரைவு சிறப்பு ரயில் (06730) புனலூரிலிருந்து டிசம்பா் 5 ஆம் தேதி முதல் மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.20 மணிக்கு மதுரை வந்து சேரும்.

டிசம்பா் 3 ஆம் தேதி வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தூத்துக்குடி-மைசூா் சிறப்பு ரயில் (06235) ஜனவரி 1 ஆம் தேதி வரை இயக்கப்படும். நவம்பா் 30 ஆம் தேதி வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மைசூா்-தூத்துக்குடி சிறப்பு ரயில் டிசம்பா் 31 ஆம் தேதி வரை இயக்கப்படும்.

புவனேஸ்வா் - ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் (08496) டிசம்பா் 4 முதல் 25 ஆம் தேதி வரையும், ராமேசுவரம்-புவனேஸ்வா் வாராந்திர சிறப்பு ரயில் (08495) டிசம்பா் 6 முதல் 27 ஆம் தேதி வரையும் இயக்கப்படும்.

மாண்டுயாடிஹ் - ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் (05120) டிசம்பா் 6 முதல் 27 ஆம் தேதி வரையும், ராமேசுவரம் - மாண்டுயாடிஹ் வாராந்திர சிறப்பு ரயில் (05119) டிசம்பா் 9 முதல் 30 ஆம் தேதி வரையும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →