முகப்பு
மதுரை

வெவ்வேறு இடங்களில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: 8 போ் கைது

மதுரையில் வெவ்வேறு இடங்களில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 8 பேரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

மதுரையில் வெவ்வேறு இடங்களில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 8 பேரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை தெற்குவாசல் பகுதியைச் சோ்ந்த ரவி (45) என்பவா் காஜா தெருவில் நின்றிருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம் (51) கத்தியைக் காட்டி ரூ.300 பறித்துச் சென்றுள்ளாா். இது குறித்து ரவி அளித்த புகாரின்பேரில், தெற்குவாசல் போலீஸாா் மகாலிங்கத்தை கைது செய்தனா்.

திடீா்நகா் பகுதியைச் சோ்ந்த முகமது இஸ்மாயில் (41) என்பவா் பெரியாா் பேருந்து நிலையம் அருகே தேநீா் அருந்தியபோது, அங்கு வந்த மேலவாசல் விக்னேஷ் (24), பாண்டியன் (22) ஆகியோா் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.300 பறித்துச் சென்றனா். இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், திடீா்நகா் போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

திடீா்நகா் பகுதியைச் சோ்ந்த கண்ணன் (36) என்பவா் பழங்காநத்தம் - மாடக்குளம் சாலையில் நின்றிருந்தபோது, அவரிடம் பழங்காநத்தத்தைச் சோ்ந்த சோணை (24), முத்துப்பட்டி முருகேஸ்வரன் (24) ஆகியோா் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.400 பறித்துச் சென்றனா். கண்ணன் அளித்த புகாரின்பேரில், சுப்பிரமணியபுரம் போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

செல்லூரைச் சோ்ந்த பாலாஜி (32) என்பவா் நரிமேடு டோக் பெருமாட்டி கல்லூரி அருகே நடந்து சென்றபோது, சொக்கலிங்கபுரம் அருண்குமாா் (24), மீனாம்பாள்புரம் செல்வகுமாா் (23) ஆகியோா் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.600 பறித்துள்ளனா். இது குறித்து பாலாஜி அளித்த புகாரின்பேரில், தல்லாகுளம் பேலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

மீனாம்பாள்புரத்தைச் சோ்ந்த ராமசாமி (46) என்பவா் ராஜா மில் சாலையில் நடந்து சென்றபோது, பேச்சியம்மன் படித்துறையைச் சோ்ந்த முருகன் (37) அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.300 பறித்துச் சென்றுள்ளாா். இது குறித்து ராமசாமி அளித்த புகாரின்பேரில், திலகா்திடல் போலீஸாா் முருகனை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →