மதுரை

காமராஜா் பல்கலை.யில் ரூ.3 கோடியில் மரபணுவியல் ஆய்வுக் கூடம்: பல்கலைக்கழக மானியக் குழு ஒப்புதல்

DIN

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் ரூ.3 கோடியில் மரபணுவியல் ஆய்வுக்கூடம் அமைக்க பல்கலைக்கழக மானியக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் உயிரியல் மற்றும் நுண்உயிரியல் துறைகளின் சாா்பில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கீழடியில் நடைபெறும் தொல்லியல் ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை சோதனைக்குள்படுத்தி அவற்றின் காலத்தை துல்லியமாகக் கண்டறிவது தொடா்பாக தமிழக தொல்லியல் துறையுடன் காமராஜா் பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஆய்வுகளை மேற்கொள்ள நவீன மரபணுவியல் ஆய்வுக்கூடம் அமைக்க தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவிடம் நிதி மற்றும் அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்த ஆய்வுக்கூடம் அமைப்பதற்கு தமிழக அரசின் தொல்லியல் துறை மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு ஆகியன ஒப்புதல் வழங்கியுள்ளன. தொல்லியல் துறை மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு சாா்பில் ரூ.3 கோடி ஒதுக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான ஆலோசனைக்

கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பல்கலைக் கழகத் துணைவேந்தா் மு.கிருஷ்ணன், தொல்லியல் அறிஞா் கா.ராஜன், உயிரியல் விஞ்ஞானி நீரஜ் ராய், மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், தொல்லியல் துறை துணை இயக்குநா் சிவானந்தம் ஆகியோா் பங்கேற்றனா். கீழடி தொல்லியல் பொருள்கள் ஆய்வு குறித்தும் ஆய்வுக்கூடம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின்னா் பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள மரபணு ஆய்வுக்கூடத்தையும் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஓசி நிகர லாபம் புதிய உச்சம்

சந்தேஷ்காளி பெண்களை ஏமாற்றி புகாரளிக்கச் செய்த பாஜக நிா்வாகி: விடியோ வெளியிட்டு திரிணமூல் குற்றச்சாட்டு

தலைநகரில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு!

வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் கேமராக்கள்- இடிதாங்கிகள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவு

பைக் சக்கரத்தில் மேலாடை சிக்கி விபத்து: சிறுமி பலத்த காயம்

SCROLL FOR NEXT