நல்லமரம் கொட்டாணிபட்டியில் ஸ்ரீ வீரபக்த ஆஞ்சனேயருக்கு சிறப்பு அலங்காரம்
டி.கல்லுப்பட்டி அருகே ஸ்ரீ வீரபக்த ஆஞ்சனேயர் கோயிலில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
டி.கல்லுப்பட்டி அருகே ஸ்ரீ வீரபக்த ஆஞ்சனேயர் கோயிலில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே உள்ள நல்லமரம் கொட்டாணிபட்டியில் ஸ்ரீ வீர பக்த ஆஞ்சனேயருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு யாகம் நடைபெற்றது. இதில் கும்ப பூஜை,கலச பஜை, கோமாதா பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீ வீர பக்த ஆஞ்சனேயர் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி அனுமந்த வாகன அலங்காரத்தில் காட்சியளத்தார். ஜோதிடர் அறிவழகன் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். பேரையூர், டி.கல்லுப்பட்டி, நல்லமரம், வையூர், திருமங்கலம், அருப்புக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.