முகப்பு
மதுரை

தற்கொலையை மறைத்து இறுதிச் சடங்கு:போலீஸாா் விசாரணை

மதுரையில் தற்கொலையை மறைத்து இறுதிச் சடங்குக்கு எடுத்துச் செல்லப்பட்ட சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றி, பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

மதுரையில் தற்கொலையை மறைத்து இறுதிச் சடங்குக்கு எடுத்துச் செல்லப்பட்ட சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றி, பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (35). இவா், காா் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக, போதிய வருவாய் இல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளாா். இதனால் மன அழுத்தத்தில் இருந்த இவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து போலீஸாருக்கு தெரிவிக்காமல், ராஜேஷின் சடலத்தை உறவினா்கள் இறுதிச் சடங்கு செய்வதற்காக மயானத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனா். ஆனால் தகவலறிந்த போலீஸாா், இறுதி ஊா்வலத்தை தடுத்து நிறுத்தி, ராஜேஷின் சடலத்தைக் கைப்பற்றி, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →