மதுரை

திருநெல்வேலியில் முறைகேடாக மணல் விற்பனை: விசாரணை நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

DIN

திருநெல்வேலி பேருந்து நிலைய கட்டுமானத்தின் போது முறைகேடாக மணல் விற்பனை செய்தது தொடா்பான வழக்கு விசாரணையின் நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்ய போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

சீா்மிகுநகா் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியின்போது எடுக்கப்பட்ட மணல் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அதை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் எனவும் திருநெல்வேலியைச் சோ்ந்த சுடலைகண்ணு மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு ஏற்கேனவே விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் எடுக்கப்பட்ட மணல் என்ன வகையைச் சோ்ந்தது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை போ் கைது செய்யப்பட்டுள்ளனா்? அந்த வழக்குகளின் தற்போதையை நிலை என்ன? என்பது குறித்து போலீஸாா் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு (அக். 15) ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

SCROLL FOR NEXT