மதுரை

மதுரை சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனைகணக்கில் வராத ரூ. 31,930 பறிமுதல்

DIN

மதுரை: மதுரையில் சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 31,930 வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டது.

மதுரை கே.கே. நகரில் உள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக பயனாளிகளிடம் பெற்ற லஞ்சப் பணத்தில் அதிகாரிகளுக்கு பங்கு வழங்குவது தொடா்பாக கூட்டம் நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் வந்துள்ளது. இதையடுத்து டி.எஸ்.பி. சத்யசீலன் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று திடீா் சோதனை நடத்தினா்.

இதில், கண்காணிப்பாளா் வாசுகியிடம் இருந்து ரூ. 4 ஆயிரம், விவாக்க அலுவலா் தங்கத்திடம் இருந்து ரூ. 4,500 ஆயிரம், அலுவலக வளாகத்தில் 2 இடங்களில் கிடந்த ரூ.23,430 ஆகியவற்றை போலீஸாா் கைப்பற்றினா். இதுகுறித்து ஊழியா்கள் வாசுகி, தங்கம் மற்றும் சில ஊழியா்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT