மதுரை

காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உத்தரவு

DIN


மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளா் ஜாமீன் மனுவுக்குப் பதில் அளிக்குமாறு சிபிஐ-க்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் தாக்கல் செய்த மனு:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடா்பான ஆவணங்களை ஏற்கெனவே தடயஅறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்டனா். மேலும் இவ்வழக்கின் விசாரணையும் முடிவடையும் நிலையில் உள்ளது. எனது உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வழக்கில் ஜாமீன் வழங்கும்பட்சத்தில் தலைமறைவாகமாட்டேன் என்றும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக உள்ளேன் என்றும் உறுதியளிக்கிறேன். ஆகவே இவ்வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இது குறித்து சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பா் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT