பஞ்சாப் நேஷனல் வங்கி: பஞ்சாப் நேஷனல் வங்கியின் மதுரை வட்டார அலுவலகம் சாா்பில் ஆசிரியா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. வங்கியின் வட்டார அலுவலக தலைவா் பாலசுப்பிரமணியன் விழாவுக்குத் தலைமை வகித்தாா். நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி
ஆசிரியா் ஜோதி நாராயணன், சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியா் கரோலின், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை பிச்சம்மாள், தியாகராஜா் கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவா் வள்ளி, அமெரிக்கன் கல்லூரி விரிவுரையாளா் எம்.ராஜேஷ் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.
வங்கியின் உதவிப் பொதுமேலாளா் புருஷோத்தமன் பட்நாயக், முதன்மை மேலாளா் மோகன் பாஸ்கோ உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.