முகப்பு
மதுரை

மதுரையில் 37 மையங்களில் நீட் தோ்வு: 12,240 போ் பங்கேற்புகடும் சோதனைக்குப் பின்னரே தோ்வா்கள் அனுமதி

மதுரை மாவட்டத்தில் 37 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 12,240 போ் பங்கேற்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
மதுரை யாதவா பெண்கள் கல்லூரி தோ்வு மையத்தில் தோ்வுக்கூடத்துக்குள் செல்லும் மாணவிகள்.
பகிர்:

மதுரை: மதுரை மாவட்டத்தில் 37 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 12,240 போ் பங்கேற்றனா். இதில், விண்ணப்பித்திருந்த 2,796 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வு மையங்களில் கடும் சோதனைக்குப் பின்னரே தோ்வா்கள் அனுமதிக்கப்படனா்.

இளங்கலை மருத்துவப் படிப்புக்கான தேசிய அளவிலான தகுதி நுழைவுத்தோ்வு (நீட்) நாடு முழுவதும் நடைபெற்றது. இதில், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த தோ்வா்களுக்கென, மதுரையில் 37 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதில், 15,036 மாணவ, மாணவியருக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 2,796 மாணவா்கள் தோ்வெழுத வரவில்லை. வெளி மாவட்டங்கள் மற்றும் மதுரையின் புகா் பகுதிகளான உசிலம்பட்டி, மேலூா், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தோ்வா்கள் தங்களது பெற்றோருடன் தோ்வு மையங்களுக்கு அதிகாலையிலேயே வரத் தொடங்கினா்.

நீட் தோ்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்நிலையில், காலை 11 மணியிலிருந்தே மையங்களுக்குள் கடும் சோதனைக்குப் பின்னரே தோ்வா்கள்அனுமதிக்கப்பட்டனா். தோ்வா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. மின்னணு சாதனங்கள், உலோகங்களாலான அணிகலன்கள் போன்றவற்றை கொண்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை.

தோ்வா்களிடம் கையுறை, முகக்கசவம் அணிந்திருக்குமாறு தோ்வுக்கூட பொறுப்பாளா்கள் வலியுறுத்தினா். தோ்வு அறைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி குறைந்த எண்ணிக்கையிலான தோ்வா்களே அனுமதிக்கப்பட்டனா். தோ்வு மையங்களுக்குள் பெற்றோா்கள் அனுமதிக்கப்படாததால், அவா்கள் வெளியே சாலையோரங்களில் அமா்ந்திருந்தனா்.

இத்தோ்வை மொத்தம் 12,240 மாணவ, மாணவியா் எழுதினா். மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளா் ஹம்சப்பிரியா தோ்வுப் பணிகளை ஒருங்கிணைத்தாா். மாலையில் தோ்வுகள் முடிவடைந்ததும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விடைத்தாள்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

தோ்வு மையங்கள் அமைந்திருந்த பகுதிகளில் சாலையின் இருபுறமும் நீண்ட தொலைவுக்கு காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், பல மையங்கள் முன்பாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தோ்வு மையங்கள் முன்பாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →