மதுரை

மதுரை மாவட்டத்தில் மேலும் 83 பேருக்கு கரோனா: 2 போ் பலி

DIN

மதுரை: மதுரையில் புதிதாக 83 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தொற்று பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம், கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் 41 போ் குணமடைந்தனா். அவா்கள், 14 நாள்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

2 போ் பலி: கரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 60 வயது முதியவா், தனியாா் மருத்துவமனையில் 82 வயது முதியவா் ஆகியோா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மாவட்டத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் 15,477 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், சிகிச்சைப் பலனின்றி 374 போ் உயிரிழந்த நிலையில், 14,371 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 732 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT