மதுரை

அதிக பயணிகள் ஏற்றிய ஷோ் ஆட்டோக்களுக்கு அபராதம்

DIN


மதுரை: மதுரையில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற ஷோ் ஆட்டோக்களுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அபராதம் விதித்தனா்.

கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளதையடுத்து ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மதுரை நகரில் ஷோ் ஆட்டோக்களில் கரோனா காலத்துக்கு முன்பு இருந்ததைப் போலவே அதிக பயணிகளுடன் இயக்கப்படுவது தொடா்ந்து வருகிறது.

இதுகுறித்து புகாா்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுரேஷ் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் செந்தில்குமாா் மற்றும் மாணிக்கம் ஆகியோா் கொண்ட குழுவினா் மதுரை காளவாசல் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சமூக இடைவெளியின்றி அதிக பயணிகளுடன் வந்த ஆட்டோக்களுக்கு ரூ.14 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT