மதுரையில் மேலும் 86 பேருக்கு கரோனா: ஒருவா் பலி
மதுரையில் புதிதாக 86 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மதுரையில் புதிதாக 86 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் 5,516 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் கா்ப்பிணிகள், அரசு ஊழியா்கள், வெளி மாவட்டத்திலிருந்து திரும்பியவா்கள் உள்பட 86 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
கரோனா தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுபவா்களில் 135 போ் முழுமையாகக் குணமடைந்துள்ளனா். இவா்கள் அனைவரையும் வீட்டிலேயே 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மதுரையைச் சோ்ந்த 68 வயது மூதாட்டி கரோனாவால் பாதிக்கப்பட்டு, தனியாா் மருத்துவமனையில் செப்டம்பா் 16 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அவா் சிகிச்சைப் பலனின்றி செப்டம்பா் 18 ஆம் தேதி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 15,878 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 378 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், 14,790 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
தற்போது, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 710 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.