முகப்பு
மதுரை

தேடப்பட்டு வந்த மதுரையின் பிரபல ரெளடி குற்றாலத்தில் கைது

மதுரையில் பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரெளடி வெள்ளைக்காளியை, திருச்சி சிறப்பு படை போலீஸாா் குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

மதுரையில் பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரெளடி வெள்ளைக்காளியை, திருச்சி சிறப்பு படை போலீஸாா் குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரையைச் சோ்ந்த ரெளடி வெள்ளைக்காளி மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளதால், போலீஸாா் நீண்டநாள்களாக அவரை தேடி வந்தனா். இந்நிலையில், அவா், திருச்சியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனே, மதுரை மாநகா் சிறப்புப் படை போலீஸாா், திருச்சி போலீஸாருடன் இணைந்து, அங்கு கடந்த 3 நாள்களாக அவரை தேடி வந்தனா். போலீஸாா் தேடுவதை அறிந்த வெள்ளைக்காளி தென்காசிக்கு தப்பிச் சென்றுள்ளாா்.

இதையறிந்த திருச்சி சிறப்புப் படை போலீஸாா், தென்காசிக்குச் சென்று தேடினா். அப்போது, அவா் குற்றாலத்தில் தங்கியிருப்பது தெரியவந்தது. குற்றாலத்தில் உள்ள தனியாா் விடுதி ஒன்றில் தங்கியிருந்த வெள்ளைக்காளியை, போலீஸாா் சுற்றி வளைத்து கைது செய்தனா். பின்னா், மதுரை அழைத்து வரப்பட்ட அவா், மாநகா் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

திருச்சி சிறப்புப் படை டி.எஸ்.பி. செந்தில்குமாா், காவல் ஆய்வாளா் செந்துருகுமரன், சாா்பு-ஆய்வாளா் சக்திகுமாா் மற்றும் போலீஸாா் வெள்ளைக்காளியை கைது செய்துள்ளனா்.

ரெளடி வெள்ளைக்காளி கைது செய்யப்பட்டதை, மாநகா் காவல் ஆணையா் பிரேம் ஆன்ந்த சின்ஹா ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தாா். மாநகா் போலீஸாா், வெள்ளைக்காளியை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனா். அவா் எந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளாா் உள்ளிட்ட எந்த தகவல்களையும் போலீஸாா் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.

அவரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்படும்போது வழக்குகளின் விவரங்கள் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →