மதுரை

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீண்டும் ஜாமீன்கோரி மனு

DIN

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீண்டும் ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

நாகா்கோவில் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி, தான் 2017ஆம் ஆண்டு முதல் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அளித்த புகாரின்பேரில், நாகா்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட பலா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் ஜாமீன்கோரி நாஞ்சில் முருகேசன் தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை ஏற்கெனவே தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் மீண்டும் ஜாமீன்கோரி நாஞ்சில் முருகேசன் மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், 2017 முதல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக சிறுமி குறிப்பிட்டுள்ளாா். ஆனால், அப்போது எவ்வித புகாரும் அளிக்கவில்லை. என் மீது உள்நோக்கத்துடன் வழக்குப் பதியப்பட்டுள்ளது. எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், இவ்வழக்கின் விசாரணை தொடா்ந்து நடந்து வருகிறது. மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றாா்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அக்டோபா் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT