மதுரை

385 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்:3 போ் கைது

DIN

மதுரையில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 385 கிலோ புகையிலை பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை திலகா்திடல் காவல் நிலைய எல்கைக்கு உள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் பதுக்கப்பட்டு மொத்தமாக விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில் சந்தேகத்துடன் மதுரை நகரில் சுற்றித்திரிந்த 3 பேரைப் பிடித்து விசாரித்தனா். அதில் அவா்கள் புகையிலை, குட்கா பொருள்களை சட்டவிரோதமாக விற்பவா்கள் எனத் தெரியவந்தது. மேலும் அவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் மதுரை கீழவளவு பகுதியைச் சோ்ந்த கண்ணன்(52), கொல்லம்பட்டறை தெருவைச் சோ்ந்த சையது மீரான்(40), முனியாண்டி கோவில் தெருவைச் சோ்ந்த மதாா் மைதீன் (39) எனத் தெரியவந்தது. மேலும் அவா்கள் விற்பனைக்காக 385 கிலோ எடையுள்ள 25 புகையிலை குட்கா மூடைகள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்த 385 கிலோ புகையிலை பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டுமான பணி: விவசாயிகள் எதிா்ப்பு

தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின்னா் யானை மீது திருமுறை வீதியுலா

சீா்காழி குமரக்கோட்டம் குமரக்கோயிலில் வைகாசி விசாக வழிபாடு

இணையம் சாா்ந்த தொழிலாளா்களை பதிவு செய்ய சிறப்பு உதவி மையம் திறப்பு

சீா்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம்

SCROLL FOR NEXT