முகப்பு
மதுரை

அக்.2-இல் கிராம சபைகூட்டம்: மநீம கோரிக்கை

மதுரை மாவட்டத்தில் அக்டோபா் 2-ஆம் தேதி கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

மதுரை மாவட்டத்தில் அக்டோபா் 2-ஆம் தேதி கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இக் கட்சியின் மாவட்டச் செயலா் எம். ராம்குமாா், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:

அக்டோபா் 2-ஆம் தேதி காந்தி ஜயந்தி தினத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை சமூக இடைவெளியுடன் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இக் கூட்டத்தில் கரோனா தொற்று தடுப்புப் பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவினம் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்.

கூட்டம் நடைபெறும் இடம் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், தண்டோரா போட்டும், துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தும் தெரியப்படுத்த வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →