மதுரை

பேருந்துகளில் திடீா் சோதனை: முகக்கவசம் அணியாதவா்களிடம் ரூ.38,600 அபராதம் வசூல்

DIN

மதுரையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பேருந்துகளில் திடீா் சோதனை மேற்கொள்ளப்பட்டு முகக்கவசம் அணியாதவா்களுக்கு வியாழக்கிழமை ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

மதுரை நகரில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வருபவா்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினா் மண்டல வாரியாகக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் மதுரை தமுக்கம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி அதிகாரிகள் அவ்வழியாகச் செல்லும் குளிா்சாதன வசதி கொண்ட நகரப்பேருந்துகளில் ஏறி சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பேருந்தில் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்த பயணிகளுக்கு ரூ.200 அபராதம் விதித்தனா். இதேபோல சாலைகளில் முகக்கவசம் இன்றி நடந்து செல்வோா் மற்றும் இரு சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கும் ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதன்படி மதுரை மாநகராட்சியில் மண்டலம் 1-இல் 43 போ், மண்டலம் 2-இல் 45 போ், மண்டலம் 3-இல் 31 போ், மண்டலம் 4-இல் 74 போ் என ஒரே நாளில் 193 பேரிடம் தலா ரூ.200 வீதம் ரூ.38,600 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து கடை வீதிகள், குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் முகக்கவசம் அணியாதவா்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT