மதுரை

ரூ.13.88 ஜிஎஸ்டி வரிஏய்ப்பு: தனியாா் நிறுவன இயக்குநா் கைது

DIN

சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தாமல் ரூ.13.88 கோடிக்கு வரிஏய்ப்பில் ஈடுபட்ட தனியாா் நிறுவன இயக்குநா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இரு நிறுவனங்களில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். பல்வேறு துறைமுகங்களில் சரக்குகள் கையாளும் சேவையில் ஈடுபட்டு வரும் இரு நிறுவனங்களும் முறையாக ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இரு நிறுவனத்தினரும், தங்களது வாடிக்கையாளா்களிடம் வசூலித்த ரூ.9.56 கோடி வரியை, அரசுக்குச் செலுத்தாமல் இருப்பதும், முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.4.32 கோடியை உள்ளீட்டு வரியாக எடுத்துள்ளதும் தெரியவந்தது. இரு நிறுவனங்களும் மொத்தம் ரூ.13.88 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்நிறுவனங்களின் இயக்குநராக உள்ள கிரிராம் (45) கைது செய்யப்பட்டு வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT