உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூர் ஐராவதீஸ்வரர் மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் இன்று (சனிக்கிழமை) சனி மகா பிரதோசம் நடைபெற்றது.
உசிலம்பட்டி அருகே ஆணையூர் கிராமத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் மீனாட்சி அம்மன் சமேதா திருக்கோயிலில் மீனாட்சி அம்மனுக்கு திருமஞ்சனம், பால், சந்தனம், நெய், பஞ்சாமிர்தம், தயிர், அரிசி மாவு மற்றும் பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது.
சனிப்பிரதோஷம் முன்னிட்டு ஐராவதீஸ்வரர்க்கும் நந்திக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இறுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.