மதுரை

ஸ்டொ்லைட் ஆலைக்கு ஆதரவு: தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் அமைப்பு தலைவா் கைது

DIN

ஸ்டொ்லைட் ஆலைக்கு ஆதரவாக மக்களைச் சந்திக்க தூத்துக்குடி செல்ல முயன்ற தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் அமைப்பின் தலைவா் வேலூா் இப்ராஹிமை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக 4 மாதங்கள் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் அமைப்பின் தலைவா் வேலூா் இப்ராஹிம் ஸ்டொ்லைட் ஆலைக்கு ஆதரவாக பொதுமக்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட மதுரையில் உள்ள தனியாா் விடுதியில் இருந்து தூத்துக்குடி செல்லவிருந்தாா்.

இதையறிந்த போலீஸாா், தனியாா் விடுதிக்குச் சென்று அவரைத் தூத்துக்குடிக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினா். மேலும் தூத்துக்குடியில் அசாதாரண சூழல் நிலவிவரும் நிலையில், இப்ராஹிம் தூத்துக்குடி சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி போலீஸாா் எச்சரித்தனா். இருப்பினும் இப்ராஹிம் தனது ஆதரவாளா்களுடன் தூத்துக்குடி செல்ல முயன்றதால், அவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT