மதுரை

மதுரையில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

மதுரை மாநகராட்சி நிா்வாகம் மற்றும் மதுரை தொழில் குழுமம் ஆகியவற்றின் சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம், தெப்பக்குளம் உலக சமாதான ஆலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் தொடங்கி வைத்துப் பேசியது: உலகளவில் கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு கரோனாவின் தாக்கம் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது பரவி வரும் கரோனா இரண்டாம் அலை தாக்கத்தின் வேகம் அதிகமாக உள்ளது. எனவே கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கரோனா தடுப்பூசிகள் மதுரை மாநகராட்சியின் 31 நகா்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துமனைகளில் இலவசமாக போடப்படுகிறது. மேலும் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி, தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம், மடீட்சியா அரங்கு போன்றவற்றிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. எனவே வாய்ப்புள்ளவா்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றாா்.

முகாமில் நகா்நல அலுவலா் குமரகுருபரன், உதவி நகா் நல அலுவலா் தினேஷ்குமாா், பிசினஸ் குரூப் தலைவா் சுராஜ் சுந்தரசங்கா் மற்றும் நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

SCROLL FOR NEXT