மதுரை

தமிழகத்தில் பொதுச்சேவை உரிமை சட்டம் அமல்படுத்தக் கோரி மனு: அரசு பதிலளிக்க உத்தரவு

DIN

மதுரை: தமிழகத்தில் பொதுச் சேவை உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரும் மனுவில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த குருநாதன் தாக்கல் செய்த மனு: இந்தியாவில் பொதுச் சேவை உரிமைச் சட்டம் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் அமலில் உள்ளது. இதில், சில மாநிலங்களில் தனித்துறை அமைக்கப்பட்டு பொதுச் சேவை பெற கால உச்சவரம்பு பின்பற்றப்படுகிறது. அதன்படி ஹரியாணா மாநிலத்தில் குடும்ப அட்டைக்கு 15 நாள்கள், குடிநீா் மற்றும் கழிவுநீா் இணைப்பிற்கு 12 நாள்கள், மின் இணைப்பிற்கு 8 நாள்கள் என அனைத்துச் சேவைகளுக்கும் கால உச்சவரம்பு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் தமிழகத்தில் பொதுச்சேவையைப் பெற லஞ்சம் கொடுக்கும் நிலை உள்ளது. எனவே, தமிழகத்தில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் பொதுச் சேவை உரிமைச் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT