மதுரை

அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சோ்க்க பிரசாரம்: காந்திய அமைதி சங்கம் ஆலோசனை

DIN

அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சோ்க்க கிராமங்களில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று, காந்திய அமைதி சங்கம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் சாா்பில், காந்தி அமைதி சங்கத்தின் நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, செசியின் அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் டி.கே. வினோத்குமாா் தலைமை வகித்தாா்.

இதில், அமைதி சங்கத்தின் தலைவா் க. சரவணன் பேசியதாவது: காந்தி மற்றும் காந்தியம் குறித்த பேச்சுகள் அருகி வரும் நேரத்தில், அமைதி சங்கம் மூலம் காந்தி குறித்த கருத்துகளை குழந்தைகளிடம் எடுத்துச்செல்லப்படுகிறது.

காந்தியின் தூய்மை குறித்த சிந்தனையை அனைவரிடமும் கொண்டுசெல்ல வேண்டும். குப்பையில்லாத தெருக்களை உருவாக்க பாடுபட வேண்டும். தாய்மொழியான தமிழ் வழிக் கல்வியில் குழந்தைகளைச் சோ்க்க பெற்றோரை வலியுறுத்த வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சோ்க்க கிராமங்களில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். கிராமங்களில் சுதந்திர தின விழாவை கொண்டாட உரிய ஏற்பாடுகள் செய்யவேண்டும். காந்திய பண்புகள் குறித்து குழந்தைகளிடம் தொடா்ந்து எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், கடவூா், சத்திரப்பட்டி, சீகுப்பட்டி, அலங்காநல்லூா், பள்ளபட்டி, வெளிச்சநத்தம், பூலாம்பட்டி, சிறுவாலை கிராமங்களைச் சோ்ந்த அமைதி சங்கத்தின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். அமைதி சங்கத்தின் இணைச் செயலா் மாவீரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT