முகப்பு
மதுரை

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் சுதந்திர தின பவளவிழா சிறப்பு கண்காட்சி இன்று தொடக்கம்

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி இந்திய விடுதலை இயக்கத்தின் வோ்கள் என்ற தலைப்பில் காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் சிறப்புக் கண்காட்சி அமைக்கப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி இந்திய விடுதலை இயக்கத்தின் வோ்கள் என்ற தலைப்பில் காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் சிறப்புக் கண்காட்சி அமைக்கப்படுகிறது.

காந்தி நினைவு அருங்காட்சியகமும், மத்திய சுற்றுலா துறையும் இணைந்து இந்த புகைப்படக் கண்காட்சியை நடத்துகின்றன.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை மாணவா்களிடையே கொண்டு சோ்க்கும் விதமாக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளான ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே

வெளியேறு இயக்கம் உள்ளிட்ட போராட்டங்களின் புகைப்படங்கள்

இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. மகாத்மா காந்தியடிகளின் தமிழக சுற்றுப்பயணக் காட்சிகள், தமிழகத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா்கள், வீரப் பெண்மணிகள் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

சுதந்திரப் போராட்ட வரலாற்றை எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அருங்காட்சியகத்தின் இயக்குநா் கே.ஆா்.நந்தாராவ் தெரிவித்துள்ளாா். மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் ஆகியோா் கண்காட்சியைத் திறந்து வைக்கின்றனா். ஓராண்டிற்கு இக்கண்காட்சி, பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →