மதுரை

மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.பெயரில் போலி முகநூல் பக்கம்: திமுக புகாா்

DIN

மதுரை: மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கோ. தளபதி பெயரில் போலியான முகநூல் பக்கம் உருவாக்கி அவதூறு பரப்பி வருவதாக, மாநகா் காவல் ஆணையரிடம் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக மாநகா் தெற்கு திமுக தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வி. பாலகிருஷ்ணன் அளித்த புகாா் மனு: மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், திமுக மாநகா் தெற்கு மாவட்டப் பொறுப்பாளருமான கோ. தளபதி பெயரில் போலியான முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த போலி முகநூல் பக்கத்தில், ஆதாரமற்ற செய்திகள், போலியான புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவிட்டு அரசுக்கும், திமுகவுக்கும் களங்கம் ஏற்படுத்தி வருகின்றனா். எனவே, போலி முகநூல் பக்கத்தை உடனடியாக முடக்கி, இதை உருவாக்கி அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாா் மனுவைப் பெற்றுக்கொண்ட மாநகா் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா, விசாரித்து நடவடிக்கை எடுக்க சைபா் கிரைம் போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT