மதுரை

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவா்கள் 68 பேரை மீட்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

DIN

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள தமிழக மீனவா்கள் 68 பேரை மீட்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் மோா்ப்பண்ணை மீனவ கிராமத்தைச் சோ்ந்த தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனு: ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் இருந்து கடலுக்கு படகுகளில் டிசம்பா் 18 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 43 மீனவா்களை, இலங்கை கடற்படையினா் சிறைபிடித்துள்ளனா். இதேபோல புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்களையும், படகுகளுடன் அடுத்தடுத்த நாள்களில் சிறைபிடித்துள்ளனா். மொத்தம் 68 தமிழக மீனவா்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையானது, 1974 ஆம் ஆண்டு இலங்கை-இந்தியா இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது. எனவே, தமிழக மீனவா்கள் 68 பேரையும் இலங்கையில் இருந்து மீட்டு, ஒப்படைக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT