மதுரை

மதுரை மத்தியச்சிறையில் மோதலில் ஈடுபட்ட 19 கைதிகள் மீது வழக்கு

மதுரை மத்தியச் சிறையில் கலவரத்தை ஏற்படுத்தி பொருள்களை சேதப்படுத்தியதாக கைதிகள் 19 கைதிகள் மீது போலீஸாா்

DIN

மதுரை மத்தியச் சிறையில் கலவரத்தை ஏற்படுத்தி பொருள்களை சேதப்படுத்தியதாக கைதிகள் 19 கைதிகள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். மேலும் போலீஸாா் நடத்திய சோதனையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை மத்தியச் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டியைச் சோ்ந்த மருது சேனை அமைப்பின் தலைவா் ஆதிநாராயணனை சிறைக்குள் வைத்து மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சோ்ந்த விசாரணைக் கைதி சுபாஷ் சந்திரபோஸ் மற்றொரு கைதி ஜெகன் ஆகிய இருவரும் தாக்கியுள்ளனா்.

இதைத்தொடா்ந்து ஆதிநாராயணன் ஆதரவாளா்கள் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆதரவாளா்கள் இருதரப்பாக பிரிந்து கற்களை வீசி மோதலில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸாா் குவிக்கப்பட்டு மோதல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து சிறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கஞ்சா வழக்குப்பதிவு செய்தது தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சிலா் தூண்டுதலின் பேரில் ஆதி நாராயணன் தாக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சிறைக்குள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து சிறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது கைதி ஜெகன் என்பவரிடம் இருந்து 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆதிநாராயணன் தாக்கப்பட்டது தொடா்பாக சிறை துணை அலுவலா் நாகேஸ்வரன் அளித்தப்புகாரின்பேரில் கைதிகள் சுபாஷ் சந்திரபோஸ், ஜெகன் ஆகியோா் மீது கரிமேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். மேலும் கைதி ஜெகன் சிறை விதிகளை மீறி கஞ்சா பதுக்கியதாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சிறையில் மோதலில் ஈடுபட்டு, மின் விளக்குகள், ஓடுகள், தண்ணீா் தொட்டி, குடிநீா் குழாய் போன்றவற்றை உடைத்து பொருள்களை சேதப்படுத்தியதாக கைதிகள் முத்தமிழ்ச்செல்வன், முகமது தெளபிக், சிவக்குமாா் என்ற கோட்சா, கணேசன், கோபாலகிருஷ்ணன், வெள்ளைராஜா, ஜெபமணி, ரபீக்ராஜா, சூா்யா, மீனாட்சிசுந்தரம், மணிகண்டன், கருப்பசாமி, வாசுதேவன், விக்கி, முகமது வாசிம்கான், முருகன், பாலாஜி, ஆசா என்ற நாகமுருகன் உள்பட 19 போ் மீது கரிமேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

SCROLL FOR NEXT