மதுரை

போடி புதிய பேருந்து நிலைய கடைக்கு வாடகை செலுத்தக்கோரிய நோட்டீஸுக்கு இடைக்காலத்தடை

போடி புதிய பேருந்து நிலைய கடைக்கு கரோனாவால் மூடப்பட்டிருந்த காலங்களுக்கான வாடகையைச் செலுத்தக்கோரி நகராட்சி

DIN

போடி புதிய பேருந்து நிலைய கடைக்கு கரோனாவால் மூடப்பட்டிருந்த காலங்களுக்கான வாடகையைச் செலுத்தக்கோரி நகராட்சி ஆணையா் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத்தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டம் போடியைச் சோ்ந்த ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த மனு: போடி புதிய பேருந்து நிலையத்தில் தேநீா் கடை நடத்தி வருகிறேன். இந்தக் கடைக்கு நகராட்சிக்கு மாதம் ரூ.11 ஆயிரத்து 800 வாடகை செலுத்தப்படுகிறது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக 2020 மாா்ச் 25 ஆம் தேதி முதல் 2020 ஜனவரி 3 ஆம் தேதி வரை கடை மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடை மூடப்பட்டிருந்த காலத்திற்கான வாடகை பாக்கி ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 800 ஐ உடனடியாக செலுத்துமாறு நகராட்சி ஆணையா் 2020 டிசம்பா் 30 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். இது சட்டவிரோதமாகும். வாடகை பாக்கியைச் செலுத்தாவிட்டால் கடையை மூடுவதாக நகராட்சி ஊழியா்கள் மிரட்டி வருகின்றனா். கடைகள் அடைக்கப்பட்டிருந்த மாதங்களுக்கான வாடகையை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். கடை வாடகை பாக்கி தொடா்பாக நகராட்சி ஆணையா் அனுப்பியுள்ள நோட்டீஸை ரத்து செய்து, தேநீா் கடையை தொடா்ந்து நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி வி.பாா்த்தீபன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போடி பேருந்து நிலைய தேநீா் கடைக்கு வாடகை பாக்கி கேட்டு நகராட்சி ஆணையா் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை மாா்ச் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT