மதுரை

மதுரையில் கருணாநிதிக்கு சிலை: அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு

DIN

மதுரையில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதிக்கு சிலை வைப்பது தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த உக்கிரபாண்டியன் தாக்கல் செய்த மனு: மதுரையில் கருணாநிதியின் சிலையை வைக்கக்கோரி தொடா்ந்த வழக்கில், மதுரை மாநகராட்சி ஆணையா் முடிவெடுக்கலாம் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. அதனடிப்படையில் மதுரை சிம்மக்கல் பகுதியில் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டது. போக்குவரத்து மற்றும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இந்தப் பகுதியில் சிவன்கோயிலும், செல்லத்தம்மன் கோயிலும் அமைந்துள்ளன. தற்போது தோ்தல் நேரம் என்பதால் திமுகவைச் சோ்ந்தவா்கள் அந்தப்பகுதிக்கு அடிக்கடி வந்து சிலைக்கு மாலை அணிவிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சிம்மக்கல் பகுதி அரசியல் பதற்றத்துடன் இருக்கும் நிலை உள்ளது.

இதன் காரணமாக பொதுமக்களுக்கும், இப்பகுதியில் உள்ள கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே சிம்மக்கல் பகுதியில் கருணாநிதிக்கு சிலை வைப்பது தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைகள் வைப்பது தொடா்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையில் மதுரையில் கருணாநிதி சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பில், உரிய தகவல் பெற்று தெரிவிக்கக் காலஅவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், சிலை வைப்பது தொடா்பான வழக்குகளுடன் இந்த வழக்கையும் சோ்த்து பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையை புதன்கிழமைக்கு (பிப்ரவரி 24) ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலை ரயில் இன்று ரத்து!

காஸாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்: 23 பேர் பலி!

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

SCROLL FOR NEXT