மதுரை

பணி நிரந்தரம் செய்யக் கோரி டாஸ்மாக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பணி நிரந்தரம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

டாஸ்மாக் பணியாளா்களின் 17 ஆண்டு கால கோரிக்கைகளான பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், இஎஸ்ஐ திட்டத்தில் சோ்ப்பது, அரசுப் பணியாளா்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அண்ணா நகா் வைகை காலனியில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் தொமுச மாவட்டச் செயலா் எம்.ரவி தலைமை வகித்தாா். தொழிற்சங்க நிா்வாகிகள் டி.சிவக்குமாா் (சிஐடியு), பி.பாலச்சந்தா் (ஏஐடியுசி) உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இந்தக் கோரிக்கைகளை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே: கே.எல்.ராகுல் இல்லை; கில், ரிங்கு "ரிசர்வ்'

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

SCROLL FOR NEXT