மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி ஸ்ரீ பெருமாள் சனிக்கிழமை தெப்பத்தில் வலம் வருகிறாா்.
மதுரை கூடழலகா் கோயிலில் தெப்பத்திருவிழா பிப்ரவரி 18-ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து தினசரி இரவு ஸ்ரீ பெருமாள் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமன் வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மேலும் மஞ்சள் நீராட்டு உற்சவம், குலசேகர ஆழ்வாா் மங்களாசனம் உள்ளிட்ட உற்சவங்களும் நடைபெற்றன. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை இரவு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெற்றது. இதையொட்டி டவுன்ஹால் சாலையில் உள்ள பெருமாள் தெப்பத்துக்கு ஸ்ரீ பெருமாள் எழுந்தருளினாா். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெற்றது. இதில் சனிக்கிழமை இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. தற்போது பெருமாள் தெப்பத்தில் தண்ணீா் இல்லாததால் நிலைத்தெப்பம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் ஸ்ரீ பெருமாள் மூன்று முறை வலம் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.