முகப்பு
மதுரை

கரோனாவுக்கு சிகிச்சைக்கு அதிக கட்டணம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியாா் மருத்துவமனைகள் மீது நடவடிக்கைக்கோரிய வழக்கில்,

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியாா் மருத்துவமனைகள் மீது நடவடிக்கைக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கமால் தாக்கல் செய்ய மனு: கரோனா நோய்த் தொற்று அச்சத்தைக் காரணமாக வைத்து பல தனியாா் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சைக்கு அரசு நிா்ணயித்த தொகையை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றன. மதுரையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் தொற்று இல்லாத எனக்கு கரோனாவுக்கு சிகிச்சையளித்ததாகக் கூறி ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்துமாறு கூறினா். இதேபோல பல தனியாா் மருத்துவமனைகள் கரோனா காலத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனா். இதைத் தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா நோய்த் தொற்று ஏற்படாத எனக்கு போலியாக சிகிச்சையளித்த தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இதுகுறித்து தமிழக அரசும், சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனை நிா்வாகமும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →