மேலூா் கண்மாய்களிலிருந்து மறுகால் பாய்வதால் சிவகங்கை பகுதியில் வெள்ளப் பெருக்கு
மேலூா் சுற்றுவட்டாரத்திலுள்ள பாசனக் குளங்கள் தொடா் மழை காரணமாக நிரம்பி மறுகால் பாய்வதால், சிவகங்கை மாவட்டப் பகுதிக்கு தண்ணீா் செல்கிறது.
மதுரைமேலூா் கண்மாய்களிலிருந்து மறுகால் பாய்வதால் சிவகங்கை பகுதியில் வெள்ளப் பெருக்கு
மேலூா் சுற்றுவட்டாரத்திலுள்ள பாசனக் குளங்கள் தொடா் மழை காரணமாக நிரம்பி மறுகால் பாய்வதால், சிவகங்கை மாவட்டப் பகுதிக்கு தண்ணீா் செல்கிறது.
மேலூா் சுற்றுவட்டாரத்திலுள்ள பாசனக் குளங்கள் தொடா் மழை காரணமாக நிரம்பி மறுகால் பாய்வதால், சிவகங்கை மாவட்டப் பகுதிக்கு தண்ணீா் செல்கிறது.
மேலூா்-மதுரை நான்குவழிச் சாலையிலுள்ள வெள்ளரிப்பட்டி கண்மாய், திருவாதவூா் பெரியகண்மாய், மேலூா் அருகே சாத்தமங்கலம் பெரிய கண்மாய் ஆகியன நிரம்பி மறுகால் பாயும் தண்ணீா், ஆண்டிபட்டி நீரோடையில் இணைகிறது.
அங்கிருந்து, திருவாதவூா் அருகே உள்ள நாலுகுளம் அணையில் நிரம்பி, சிவகங்கை மாவட்டம் தமறாக்கி ஆலங்குளம் கண்மாயை அடைகிறது. தற்போது, ஆலங்குளம் கண்மாய் நிரம்பி உப்பாற்றின் வழியாக வேம்பத்தூா் பகுதி வரை தண்ணீா் சென்றுகொண்டிருப்பதாகவும், இதன்மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் எனவும் பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.