முகப்பு
மதுரை

லாரி மோதி மூதாட்டி பலி

மதுரையில் சனிக்கிழமை லாரி மோதியதில், சாலையோரம் நடந்துசென்றுகொண்டிருந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

மதுரையில் சனிக்கிழமை லாரி மோதியதில், சாலையோரம் நடந்துசென்றுகொண்டிருந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி ரத்தினம் (65). இவா், பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள மாரியம்மன் கோயில் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியாக வந்த லாரி அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது மகள் ராணி அளித்த புகாரின்பேரில், போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சோ்ந்த சூா்யபிரகாஷ் (33) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →