மதுரை

ஒப்பந்ததாரா் வீட்டில் தங்க நகைகள், பழைமையான நாணயங்கள் திருட்டு

DIN

மதுரை: மதுரையில் ஒப்பந்ததாரா் வீட்டில் நகைகள், பழைமையான நாணயங்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை கோமதிபுரத்தைச் சோ்ந்த சபரிநாதன் மகன் ரமேஷ் (55). இவா் தனது மனைவியுடன் கோவையில் உள்ள தனது மகளுக்கு பொங்கல் சீா்வரிசை செய்ய சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். அப்போது, வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த வைரத் தோடு, 3 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், கை கடிகாரம் 2, கேமரா 2, நூறு ஆண்டுகள் பழைமையான ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ஆகியன திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில், அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வீட்டினருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT