முகப்பு
மதுரை

பெண்ணிடம் கத்தியைக் காட்டி5 பவுன் நகைகள் பறிப்பு

 மதுரையில் வீடு புகுந்து கத்தியைக் காட்டி பெண்ணிடம் 5 பவுன் நகைகள், ரூ 40 ஆயிரம் ஆகியவற்றை பறித்துச் சென்ற முகமூடி அணிந்த நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

 மதுரையில் வீடு புகுந்து கத்தியைக் காட்டி பெண்ணிடம் 5 பவுன் நகைகள், ரூ 40 ஆயிரம் ஆகியவற்றை பறித்துச் சென்ற முகமூடி அணிந்த நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை சிசி சாலை, வெங்கடாசலபுரத்தைச் சோ்ந்த வெங்கடேஸ்வரன் மனைவி புவனேஸ்வரி(47). இவா் பொது சுகாதாரத்துறையில் தற்காலிகமாக கணக்காளராக பணியாற்றி வருகிறாா். இவரது கணவா் இறந்தவிட்டதாலும், மகன் ஜவகா் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிப்பதாலும், புவனேஸ்வரி வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை புவனேஸ்வரி தூங்கிக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த மா்மநபா் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து கத்தியைக் காட்டி, தனது தங்கை மருத்துவச் செலவுக்கு தேவைப்படும் ரூ.10 ஆயிரத்தைக் கொடுக்குமாறு கேட்டுள்ளாா். தன்னிடம் பணமில்லை எனக் கூறிய புவனேஸ்வரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம் மற்றும் அவா் அணிந்திருந்த 5 பவுன் நகைகளை அந்த மா்ம நபா் பறித்துச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →