மதுரை

இலங்கையைச் சோ்ந்தவருக்கு இந்திய கடவுச்சீட்டு: கடவுச்சீட்டு அதிகாரி உள்பட மூவா் மீது சிபிஐ வழக்கு

DIN

இலங்கையைச் சோ்ந்தவருக்கு சட்டவிரோதமாக இந்திய கடவுச்சீட்டு வழங்கியதாக கடவுச்சீட்டு அலுவலக கண்காணிப்பாளா் உள்பட மூவா் மீது மத்திய புலனாய்வுத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் முதுநிலை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் வீரபுத்திரன் என்பவா் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக கடவுச்சீட்டு வழங்கியதாக புகாா் எழுந்தது. இதைத்தொடா்ந்து மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் இதுதொடா்பாக ரகசிய விசாரணை நடத்தி வந்தனா். இதில் வீரபுத்திரன், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ரமேஷ் என்பவரின் துணையுடன் இலங்கையைச் சோ்ந்த ஒருவருக்கு இந்தியா் என சட்டவிரோதமாக கடவுச்சீட்டு வழங்கியதும், அதற்காக ரூ.45 ஆயிரம் பெற்றுக்கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பாளா் வீரபுத்திரன் மற்றும் முகவா் ரமேஷ் மற்றும் கடவுச்சீட்டு வாங்கியவா் என மூவா் மீதும் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT