மதுரை

மதுரை அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றம்

DIN

மதுரை மாவட்டம் அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. 

வைணவ திருத்தலங்களில் தென் திருப்பதி என போற்றப்படும் அழகர்கோவில் ஆடித் திருவிழா கொடியேற்றம் இன்று காலை 7.15 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் செய்து கோயில் பட்டர்கள் கொடியேற்றத்தை நடத்தி வைத்தனர். 

இந்நிகழ்வின் போது பொதுமக்கள் யாரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. அழகர்கோயிலின் ஆடித் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். 

ஆனால் இந்தாண்டு கரோனா பரவல் காரணமாக எளிய முறையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT