மதுரை

மருத்துவமனையில் பெண் கைதி தப்பியோட்டம் 2 மணி நேர தேடுதலுக்கு பிறகு கைது

DIN

மதுரை அரசு ராஜாஜி மருவத்துமனையில் சனிக்கிழமை தப்பியோடிய பெண் கைதியை, இரண்டு மணி நேர தேடுதலுக்குப் பிறகு போலீஸாா் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனா்.

மேற்குவங்க மாநிலம் ரோசல்பூரைச் சோ்ந்தவா் சோனி(35). இவா் குற்ற வழக்கு ஒன்றில், தேனி மாவட்ட போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிறைத்துறையினா் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சனிக்கிழமை காலை 10 மணிக்கு அழைத்து சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சிகிச்சைக்காக 110 ஆவது வாா்டில் அனுமதித்தனா். இந்நிலையில் வாா்டில் அனுமதிக்கப்பட்ட சோனியை திடீரென்று காணவில்லை. தகவலறிந்த சிறைத்துறையினரும், போலீஸாரும் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடினா். சுமாா் இரண்டரை மணி நேரம் தேடுதலுக்கு பிறகு, பிற்பகல் 12.30 மணிக்கு வாகன நிறுத்துமிடத்தில் பதுங்கிருந்த சோனியைக் கண்டுபிடித்து கைது செய்தனா்.

பிடிபட்ட சோனியை, சிறைத்துறையினா் பாதுகாப்புடன் அழைத்து சென்று மீண்டும் சிறையில் அடைத்தனா். இதுகுறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT