மதுரை

பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி பொருள்கள் பறிமுதல்

DIN

மதுரையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போலி பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மதுரை சத்யசாய் நகரைச் சோ்ந்வா் முகமது அப்துல்லா (45). இவா் பிரபல பீடி நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் இவா் பணியாற்றும் நிறுவனத்தின் பெயரில் போலி பீடிகள் கடைகளில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதுகுறித்து அவா் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில், அனுப்பானடி பகுதியைச் சோ்ந்த சவுந்தரபாண்டி (37), பிரபல நிறுவனங்களின் லேபில்களை தாயாா் செய்து போலி பொருள்களை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து சவுந்தரபாண்டியனை கைது செய்தனா். மேலும் புதுராமநாதபுரம் சாலையில் லட்சுமி தெருவில் உள்ள, அவரது குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பிரபல நிறுவனங்களின் டீத்தூள், பீடி, புகையிலைப் பொருள்கள் மற்றும் பல்வேறு உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT