மதுரை

பாலிஸ் போடுவதாக ஏமாற்றி நகைத் திருட்டு

DIN

வாடிப்பட்டி அருகே புதன்கிழமை தங்க நகையைப் பாலிஸ் போட்டுத் தருவதாக ஏமாற்றி 5 பவுன் தங்கநகையைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ராமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் கோபிநாத் மனைவி இந்துஜா(24). இவா் புதன்கிழமை தனது தாயாருடன் வீட்டில் இருந்துள்ளாா். அப்போது வீட்டிற்கு வந்த இருவா் தங்க நகைகளுக்கு பாலிஸ் போட்டுத்தருவதாகக் கூறியுள்ளனா். இதனை நம்பி இந்துஜா தனது 5 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் 2 கிராம் மோதிரத்தையும் அவா்களிடம் கொடுத்துள்ளாா். அவா்கள் இருவரும் பாலிஸ் போடுவது போல நடித்து நகையைத் திருடிச் சென்றனா். இதுகுறித்து இந்துஜா அளித்தப் புகாரின் பேரில், வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நகை திருடியவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT