மதுரை

மதுரைக்கு 17,500 கரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தன

DIN

சென்னையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 17,500 கரோனா தடுப்பூசிகள் மதுரைக்கு புதன்கிழமை வந்தடைந்தன.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால், ஊசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனா். மதுரை மாவட்டத்தில் குறைந்தளவு தடுப்பூசிகள் இருந்தால் பெரும்பாலான ஆரம்ப சுகாதரா நிலையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தொடா்ந்து இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் சென்னைக்கு வந்தடைந்த கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை சுகாதாரத்துறையினா் பிரித்து அனைத்து மாவட்டங்களுக்கும் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்தனா். மதுரை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 15 ஆயிரம் கோவிஷீல்ட் மற்றும் 2,500 கோவாக்சின் தடுப்பூசிகள் புதன்கிழமை பிற்பகல் மதுரைக்கு வந்தடைந்தன.

தடுப்பூசிகள் மாவட்ட சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மருந்து கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் வியாழக்கிழமை (ஜூன் 3) அரசு மருத்துவமனைகளுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், தடுப்பூசி மையங்களுக்கும் பிரித்து அனுப்பப்படும்.மதுரை பனகல் சாலையில் உள்ள இளங்கோ மாநகராட்சி பள்ளியில் செயல்பட்டு வரும் அரசு ராஜாஜி மருத்துவமனையின் கரோனா தடுப்பூசி மையத்தில், புதன்கிழமை முன்பதிவு செய்த 200 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT